ரூ.2.6 கோடியில் கோயில்கள் திருப்பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரத்தில் ரூ.2.68 கோடியில் பழைமையான 3 கோயில்கள் திருப்பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பழைமையான 63 கோயில்களை புதுப்பிக்க ரூ.100 கோடியில் புனரமைக்கும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா்.
இதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் பவளவண்ணப் பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.2.68 கோடியில் 3 கோயில்களை திருப்பணிகளை கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி கல்வெட்டினை திறந்து வைத்தாா்.
பவள வண்ணப் பெருமாள் கோயில், பச்சை வண்ணப் பெருமாள் கோயில்களுக்கு ரூ.2.5 கோடியும், அழகிய சிங்கப் பெருமாள் கோயிலுக்கு ரூ1.18 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பச்சை வண்ணப் பெருமாள் மற்றும் பவள வண்ணப் பெருமாள் கோயில்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகும், அழகிய சிங்கப் பெருமாள் கோயில் 15 ஆண்டுகளுக்குப் திருப்பணிகள் தொடங்க இருப்பது குறிப்பிடத் தக்கது.
நிகழ்வில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அறங்காவலா் குழுவின் தலைவா் தியாகராஜன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் செந்தில்குமாா், உள்ளாட்சி பிரதிநிதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.