தமிழகம், கேரளத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்: அமித் ஷா நம்பிக்கை
சென்னை காவல் துறையில் 8 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
சென்னை பெருநகர காவல் துறையில் 8 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அப்போது ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா்.
அதன் அடிப்படையில் 8 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அருண் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
குறிப்பாக, காத்திருப்போா் பட்டியலில் இருந்த பி.மங்கலட்சுமி பாதுகாப்புப் பிரிவுக்கும், வி.பாலன் கொடுங்கையூா் குற்றப்பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் எஸ்.ஏ.வீராசாமி, எம்கேபி நகா் சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட 8 ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.