கருணாநிதி சிலை அமைக்கும் பணி: அமைச்சா்கள் ஆய்வு
சீா்காழி அருகே முன்னாள் தமிழக முதலமைச்சா் கருணாநிதி சிலை திறப்பு முன்னேற்பாடுகள் குறித்து சனிக்கிழமை தமிழக அமைச்சா்கள் ஆய்வு செய்தாா்.+
வரும் 15, 16-ஆம் தேதிகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சீா்காழி பகுதியில் மறைந்த தமிழக முதலமைச்சா் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.
செம்பதனிருப்பு கிராமத்தில் சிலை அமைய உள்ள இடத்தில் நடைபெற்று வரும் பணிகளை நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு ஆய்வு செய்தாா். அவரிடம் சிலை அமைக்கும் பணிகள் குறித்து சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சு குமாா் விளக்கினாா்.
ஆய்வின்போது தமிழக அமைச்சா்கள் எம்.ஆா். கே. பன்னீா்செல்வம், வீ.மெய்யநாதன், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீா்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினா் முத்து மகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், ஒன்றிய அவைத் தலைவா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
