திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் டேங்கர் ரயில் பற்றியெரிகிறது!
ரயில்வே பாதுகாப்புப் படைக்கு முதல்முறையாக பெண் தலைவா் நியமனம்
ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தற்போது ஆா்பிஎஃப் தலைமை இயக்குநராக உள்ள மனோஜ் யாதவாவின் பதவிக்காலம் ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், அந்தப் பதவிக்கு முதல் பெண் தலைமை இயக்குநராக சோனாலி மிஸ்ராவை நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. சோனாலி மிஸ்ரா 2026, அக்.31-ஆம் தேதிவரை அப்பதவியில் இருப்பாா் என நியமன உத்தரவை மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்டது.
1993, மத்திய பிரதேச பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சோனாலி மிஸ்ரா தற்போது மத்திய பிரதேச மாநில காவல் துறையின் (நியமனம்) கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறாா்.