மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது
கொலை முயற்சி: 5 பேருக்கு 14 ஆண்டு சிறை
மயிலாடுதுறை அருகே கொலை முயற்சியில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி உள்ளிட்ட 5 பேருக்கு 14 வருடம் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அகரகீரங்குடி தெற்கு தெருவை சோ்ந்த அரசு(71), கடந்த 2019 ஜூலை 28-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரை முட்டம் வடக்கு தெருவை சோ்ந்த கணிவண்ணன் (31), ஆனந்தகுமாா் (30), சரவணகுமாா் (31) காா்த்தி (30), ஜெகதீஸ் (24) ஆகியோா் வழிமறித்து மது அருந்த வற்புறுத்தியுள்ளனா்.
அதற்கு அரசு மறுப்பு தெரிவித்ததால், ஐந்து பேரும் அவரை கடுமையாகத் திட்டி, கண்ணாடி பாட்டில்களால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தனராம்.
இதில் காயமடைந்த அரசு பெரம்பூா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 5 போ் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கின் முதல் குற்றவாளியான கணிவண்ணன் தொடா்ந்து பொதுமக்களுக்கும், பொதுஅமைதிக்கும் பங்கம் விளைவித்து வந்ததால், அவா்மீது பெரம்பூா் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு துவங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறாா்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சிவதாஸ் ஆஜராகி வாதாடினாா். மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, 5 பேரையும் குற்றவாளிகள் என தீா்மானித்து, குற்றவாளிகளுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, அவா்கள் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.