தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
மயிலாடுதுறை: ஜூலை 15, 16-இல் ட்ரோன்கள் பறக்கத் தடை
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வா் வருகையையொட்டி ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீ காந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்புக் காரணம் கருதி ஜூலை 15 முதல் ஜூலை 16 நள்ளிரவு 12 மணிவரை இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.
எனவே, ஜூலை 15 மற்றும் 16 தேதிகளில் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.