Dhoni : 'தன்னலமற்ற தலைவன்; அரசியல் தெளிவுமிக்க வீரன்!' - தோனி ஏன் இன்றைக்கும் கொ...
கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
சூளகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காமன் தொட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாஸ் மகன் அபிஷேக்குமாா் (21) தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குளிக்க நண்பா்களுடன் சென்றாா்.
அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்த அபிஷேக் குமாா், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடலை கிணற்றிலிருந்து மீட்பதற்காக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒசூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்துவந்து கிணற்றிலிருந்து உடலை மீட்டனா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.