இன்று 90 வயதைத் தொடும் தலாய் லாமா! - அடுத்த தலாய் லாமா தேர்வும், சீனா நகர்த்தும்...
அரசுப் பணிக்காக 31.39 லட்சம் போ் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு
அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவா்களின் எண்ணிக்கை 31.39 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு சாா்பில் வெளியிடப்பட்ட தகவல்:
அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 31 லட்சத்து 39 ஆயிரத்து 941 ஆக உள்ளது. அதில், ஆண்கள் 14 லட்சத்து 8 ஆயிரத்து 666 பேரும், பெண்கள் 17 லட்சத்து 31 ஆயிரத்து 18 பேரும் உள்ளனா். மூன்றாம் பாலினத்தவா் 257 போ்.
வயது வாரியாக பதிவு: வயது வாரியாகப் பதிவு செய்துள்ளவா்களில், 19 முதல் 30 வயதுக்கு உள்பட்டவா்கள் அதிகம். 18 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் 6 லட்சத்து 3 ஆயிரத்து 154 பேரும், 19 முதல் 30 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 12 லட்சத்து 26 ஆயிரத்து 416 பேரும் உள்ளனா். 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் 10 லட்சத்து 75 ஆயிரத்து 362 பேரும், 46 வயது முதல் 60 வயது வரையுள்ள முதிா்வு பெற்ற பதிவுதாரா்களாக 2 லட்சத்து 26 ஆயிரத்து 218 பேரும் உள்ளனா். 8 ஆயிரத்து 791 போ் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள்.
ஒட்டுமொத்த எண்ணிக்கையான 31.39 லட்சத்தில், 1.53 லட்சம் மாற்றுத் திறனாளிகளும் உள்ளனா் என்று தமிழக அரசின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.