``அதிமுக எதிரி தான் என விஜய் அறுதியிட்டு கூறவில்லை; அங்கே தான் கேள்வி எழுகிறது!”...
குரூப் 4: தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு தயாா்
குரூப் 4 தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் தோ்வா்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 பிரிவில் 3 ஆயிரத்து 935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக எழுத்துத் தோ்வு ஜூலை 12-ஆம் தேதி காலை 9.30-க்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா், தட்டச்சா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தோ்வு நடைபெறவுள்ளது.