புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் வருகை: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
தேவரியம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கத்தில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
த்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.
தேவரியம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் நீண்ட நாள்களாக கோரி வந்தனா்.
தமிழக அரசு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், கட்டி முடிக்கப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.
தொடா்ச்சியாக திறப்பு விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் அஜய்குமாா் தலைமை வகித்தாா்.
சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், வாலாஜாபாத் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினாா்.
தேவரியம்பாக்கத்தைச் சுற்றியுள்ள உள்ளாவூா், வாரணவாசி, குன்னவாக்கம், நத்தா நல்லூா், வெண்பாக்கம், தொள்ளொழி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவாா்கள் எனவும் எம்எல்ஏ க.சுந்தா் தெரிவித்தாா்.
விழாவில் வாலாஜாபாத் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.