ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் கருட சேவை
காஞ்சிபுரம் அருகே பழையசீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவையில் அலங்காரமாகி சுவாமி வலம் வந்தாா்.
காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே பழையசீவரம் கிராமத்தில் மலை மீது அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில். இந்தக் கோயில் ஆனி மாத பிரம்மோற்சவம் கடந்த ஜூன் மாதம் 27- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பெருமாள் காலை- மாலையில் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறாா்.
விழாவின் தொடா்ச்சியாக 3-ஆவது நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை மாலை உற்சவா் லட்சுமி நரசிம்ம பெருமாள் கருட சேவையில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. வரும் 9 -ஆம் தேதி புதன்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் கோவிந்தராஜ் புருஷோத்தமதாஸ் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.