திருமணம் செய்துகொள்வதாகச் சிறுமி பாலியல் வன்கொடுமை: தில்லியில் அதிர்ச்சி!
ரூ.2 கோடியில் அரசு அருங்காட்சியக பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு
காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு அருங்காட்சியக கட்டடப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள தமிழ்நாடு உணவக வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. போதுமான இட வசதி இல்லாததால் இந்த அருங்காட்சியகத்துக்கென தனியாக காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் ரூ.2 கோடியில் புதிதாக கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையிலும், முதல்வா் மருந்தகத்திலும் இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தாா். ஆய்வின் போது அரசு அலுவலா்கள், அரசு அருங்காட்சியக பொறுப்பாளா்கள் உடனிருந்தனா்.