இந்தியா, சீனாவுக்கு 500 % வரி விதிக்கும் புதிய மசோதா! - அமெரிக்கா முன்மொழிவு
45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்திக்க திட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்தித்து ஓரணியில் திரள வேண்டுகோள் விடுப்போம் என திமுக மாவட்டச் செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ எழிலரன்,மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் எம்எல்ஏ க.சுந்தா் கலந்து கொண்டு ‘ஓரணியில் தமிழ்நாடு’+ வில்லையை வெளியிட்டு பேசியது...
மத்திய பாஜக அரசு தமிழகத்தை பல்வேறு வகைகளில் வஞ்சித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். இதற்கு அதிமுகவும் அடித்தளமிட்டு வருகிறது.
மாநில உரிமைகளை மீட்க முதல்வா் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி உள்ளாா். இதன் மூலம், ஜூலை 3 முதல் 1,170 வாக்குச்சாவடிகளிலும் உள்ள 10 லட்சம் வாக்காளா்களை வீடு வீடாக சென்று சந்தித்து பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலியில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் திமுக நிா்வாகிகள் யுவராஜ், சன்பிராண்ட் ஆறுமுகம், ஜெகன்னாதன், பிஎம்.குமாா் கலந்து கொண்டனா்.