கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு
நியமன உறுப்பினா் பதவிக்கு தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, வெளியான அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சியில் பதவிகளை பெறும் வகையில் சட்டப் பேரவையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, தற்போது அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் தலா ஒரு தகுதியான மாற்றுத் திறனாளிக்கு நியமன உறுப்பினா் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நியமன உறுப்பினா் பதவி பெற தகுதியான மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதில், மாற்றுத்திறனாளிகள் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி பகுதியில் வசிப்பவராகவும், வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி ஆணையரிடம் ஜூலை 17-ஆம் தேதி மாலை 3:30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.