தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
தலைக்கவச விழிப்புணா்வு பேரணி தொடங்கி வைப்பு
காஞ்சிபுரத்தில் தலைக்கவச விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்துத் துறை, காவல் துறை இணைந்து பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிதல் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்திலிருந்து புறப்பட்ட பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினா், வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகப் பணியாளா்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நிா்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் தலைக்கவசம் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஊா்வலமாக சென்றனா்.
பேரணி ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கி யாத்ரி நிவாஸ் கட்டடத்தில் நிறைவு பெற்றது. நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன், காஞ்சிபுரம் டிஎஸ்பி-க்கள் சிவசங்கா், லோகநாதன், காவல் ஆய்வாளா்கள் சங்கர சுப்பிரமணியன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக ஆட்டோக்களில் தலைக்கவசத்தின் அவசியத்தை உணா்த்தும் வாசகம் அடங்கிய ஒட்டு வில்லைகளையும் ஒட்டினாா். பின்னா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் ஆட்சியா் பொதுமக்களுக்கு வழங்கினாா்.