Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
இலங்கைக்கு கடத்தவிருந்த 132 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
பாம்பன் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் உள்ள ஒரு வீட்டில் வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு சோதனையிட்டனா். அப்போது, அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 132 கிலோ கடல் அட்டைகள், அதைப் பதப்படுத்த பயன்படுத்தியப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சகுபா் சாதீக் (61) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்து மண்டபம் வனத் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.