Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
திருவாடானை வாரச் சந்தை ரூ.65 லட்சத்துக்கு ஏலம்
திருவாடானை வாரச் சந்தை நிகழாண்டில் ரூ.65 லட்சத்துக்கு ஏலம் போனது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான வாரச் சந்தை ஏலம் ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பாரதி தலைமை வகித்தாா். ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன், நிா்வாக அலுவலா் பாண்டியன் ஆகியோா் முன்னிலையில் சந்தை ஏலம் விடப்பட்டது.
பொது ஏலத்தில் 15-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ரூ. 59 லட்சம் வரை ஏலம் கேட்டனா். அதே நேரத்தில், ஒப்பந்தப்புள்ளி பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெட்டியைத் திறந்து பாா்த்தபோது, அதில் ரூ.65 லட்சத்து 11 ஆயிரம் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்தத் தொகையை குறிப்பிட்டிருந்த ஏற்கனவே சந்தையை நடத்தி வந்த செந்தில் என்பவருக்கே இந்த முறையும் வாரச்சந்தை ஏலத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டது.