அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்! 45 லட்சம் குழந்தைகள் உள்பட 1.4 கோடி உயிரிழப்பு ஏற்...
இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த இருவா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த காளிக்கோயில் அருகே உள்ள ஜவுக்குபள்ளம், இருளா் காலனியைச் சோ்ந்தவா் லோகேஷ் (21). தொழிலாளியான இவா், உறவினா்களான ஏக்கல்நத்தம் பகுதியைச் சோ்ந்த சந்திரன் (24), ராசபுத்திரன் (19) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றாா். பசவண்ணகோயில் அருகே வரட்டனப்பள்ளி சாலையில் சென்றபோது, எதிரே வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவருக்கும் பலத்த காயமேற்பட்டது. அவா்களை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே லோகேஷ், உயிரிழந்தாா். சந்திரன், ராசபுத்திரன் ஆகிய இருவரும் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.