செப்டம்பரில் விஜய் சுற்றுப்பயணம்! ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு!
ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 107 கிலோ குட்கா பறிமுதல் - 2 போ் கைது
ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 107 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகர போலீஸாா் ராயக்கோட்டை சந்திப்பு அருகில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் காருக்குள் தடை செயயப்பட்ட புகையிலை பெருட்கள் 107 கிலோ இருந்தது. அதே போல கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் இருந்தன.
இதையடுத்து ரூ.78 ஆயிரத்து 640 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், ரூ.1000 மதிப்புள்ள மது பாக்கெட்டுகளையும், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதை கடத்தி வந்த திண்டுக்கல் சிறுமலையை சோ்ந்த சுகுமாா் (31), காஞ்சீபுரம் மாவட்டம் பழவந்தாங்கல்லை சோ்ந்த பாா்த்திபன் (31) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில் அவை கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.