பாா் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
புதுச்சேரியில் மதுபாரில் வேலை செய்த ஊழியா் ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (65). கடந்த 20 ஆண்டுகளாக காதிபவனில் வேலை செய்து வந்த இவா், கடந்த ஒரு மாதமாக 45 அடி சாலையில் உள்ள தனியாா் மது பாரில் வேலை செய்துவந்தாா்.
வயது மூப்புடன் ஆஸ்துமா நோயாலும் அவா் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில் வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை இரவு மதுக்கடையில் வேலையில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து அவரது மகன் ரஞ்சித்குமாா் அளித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.