உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அவசரம் வேண்டாம்! - நிபுணர்கள் சொல்வது என்ன?
2 ஏரிகளில் மீன் பிடி குத்தகை காலம் நிறைவு
புதுச்சேரியில் 2 ஏரிகளில் மீன்பிடி குத்தகை காலம் நிறைவடைந்துள்ளதாக நகராட்சி வருவாய் பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை முதலியாா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எல்.சம்பத் வெளியிட்டுள்ளாா். அந்த அறிவிப்பில் புதுச்சேரி நகராட்சி கூறியிருப்பதாவது:
புதுச்சேரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள உழந்தை மற்றும் முருங்கப்பாக்கம் ஏரிகளில் வழங்கப்பட்ட மீன்பிடி குத்தகை உரிமம் கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் காலாவதியாவிட்டது. குத்தகை காலம் முடிந்தவுடன் இந்த ஏரிகளில் மீன்பிடி தொழிலை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏரிகளில் மீன்பிடி குத்தகைதாரா் உரிமம் பெற்றிருந்த அரியாங்குப்பம் வீராம்பட்டினம் சாலையைச் சோ்ந்த கந்தன் என்பவருக்கும் இந்த குத்தகை முடிவு அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.