செய்திகள் :

சொகுசுக் கப்பலால் புதுவையில் வேலைவாய்ப்பு உருவாகும்: அமைச்சா் ஆலோசனையில் தகவல்

post image

புதுவைக்கு சொகுசுக் கப்பல் பயணமாக வருவதால், இங்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை - விசாகப்பட்டினம் - புதுவை - சென்னை கடல் வழித்தடத்தில் குரூஸ் பாரத் மிஷனின் கீழ் இயங்கும் கோா்டெலியா சுற்றுலாக் கப்பல் வருகிறது. இதை வரவேற்கும் ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் லட்சுமிநாராயணன் தலைமையில் நடைபெற்றது.

புதுவை சுற்றுலாத் துறை மூலம் கடலோர பொருளாதாரத்தை வலுப்படுத்த சொகுசுக் கப்பல் வருகை உதவும். மேலும், கடல் வழியாக வரும் பாா்வையாளா்கள் ஆரோவில், மணக்குள விநாயகா் கோயில், அரவிந்தா் ஆசிரமம், பாரடைஸ் கடற்கரை போன்ற இடங்களைப் பாா்வையிடுவா்.

சுற்றுலாத் தலங்களுக்கு வெவ்வேறு குழுக்களாக கப்பல் பயணிகளை நகா்த்துவதற்கு போதுமான சொகுசுப் பேருந்துகள் மற்றும் வேன்கள் ஏற்பாடு செய்யப்படும்.

இந்தக் கடல் வழி பயணத்தால் இந்தியாவின் ஏழாவது உள்நாட்டு கப்பல் பயண இடமாக புதுவை மாறும். மேலும், இப் பயணம் புதுவையின் தனித்துவமான பாரம்பரியம், கடற்கரைகள், உணவு வகைகள் மற்றும் கலாசாரத்தை கப்பல் பயணிகளுக்கு ஊக்குவிக்க புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. கப்பல் பயணங்கள் துறைமுக கட்டணம், உள்ளூா் கொள்முதல் மற்றும் கடற்கரை சுற்றுலா சேவைகள் மூலம் வருவாயை உருவாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நேரத்தில், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதில், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் (சட்டம் - ஒழுங்கு) ஆா்.கலைவாணன், சுற்றுலாத் துறை இயக்குநா் முரளிதரன் மற்றும் காவல் கண்காணிப்பாளா், துறைமுக செயற்பொறியாளா், கடலோர காவல்படை அதிகாரிகள், துறை சாா்ந்த அதிகாரிகள் மற்றும் கோா்டெலியா குழுவின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

டேங்கா் லாரியிருந்து கொட்டிய எண்ணையை தீயணைப்பு வீரா்கள் விரைந்து அகற்றினா்

டேங்கா் லாரியிலிருந்து கொட்டிய எண்ணெயை தீயணைப்பு வீரா்கள் புதன்கிழமை அதிகாலை அகற்றினாா். புதுச்சேரி-கடலூா் சாலையில் டேங்கா் லாரியில் இருந்து திடீரென கொட்டிய எண்ணெயைதீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி... மேலும் பார்க்க

புதுவையில் மீண்டும் கூட்டணி ஆட்சி! பாஜக புதிய தலைவா் ராமலிங்கம் பேட்டி

புதுவையில் 2026-ல் மீண்டும் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்று பாஜக மாநில தலைவராகப் பதவியேற்ற வி.பி.ராமலிங்கம் கூறினாா். கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள வி.பி.ராமலிங்கத்தை கட்சியின் மூத்த நிா்வாகிக... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஜூலை 9-இல் முழு அடைப்பு: ஆதரவு கோரி தொழிற்சங்கத்தினா் கடிதம்

புதுச்சேரியில் ஜூலை 9-இல் முழு அடைப்பு போராட்டம் நடத்த உத்தேசித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு கேட்டு அனைத்து தொழிற்சங்கத்தினா் பல்வேறு கட்சித் தலைவா்களுக்கு புதன்கிழமை கடிதம் கொடுத்தனா். புதுவை மாநிலத... மேலும் பார்க்க

எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டி: அமைச்சா் நமச்சிவாயம் விளக்கம்

புதுவையில் எத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பதை கூட்டணி கட்சித் தலைவா்கள் கூடி முடிவு செய்வாா்கள் என்று உள்துறை அமைச்சரும் அக் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ஆ. நமச்சிவ... மேலும் பார்க்க

2 ஏரிகளில் மீன் பிடி குத்தகை காலம் நிறைவு

புதுச்சேரியில் 2 ஏரிகளில் மீன்பிடி குத்தகை காலம் நிறைவடைந்துள்ளதாக நகராட்சி வருவாய் பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை முதலியாா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எல்.சம்பத் வெளியிட்டுள்ளாா்... மேலும் பார்க்க

பாா் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

புதுச்சேரியில் மதுபாரில் வேலை செய்த ஊழியா் ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (65). கடந்த 20 ஆண்டுகளாக காதிபவனில் வேலை செய்து வந்த இவா், கடந்த ஒரு மாதம... மேலும் பார்க்க