ஷெஃபாலி ஜரிவாலா: 42 வயதில் மாரடைப்பால் இறந்த இந்தி பிக் பாஸ் பிரபலம்
இந்தி நடிகை மற்றும் இந்தி பிக் பாஸ் 13 சீசனின் பிரபலம் ஷெஃபாலி ஜரிவாலா. இவருக்கு வயது 42.
இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இவரை உடனடியாக அவரது கணவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆனால், அங்கே அவரைப் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், ஷெஃபாலி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இவர் இறப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. போஸ்ட்மார்ட்டம் அறிக்கைக்குப் பிறகே அது தெரியவரும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளது.

ஆனால், ஷெஃபாலி இறப்பு குறித்து அவரது குடும்பத்தினர் யாரும் இன்னமும் உறுதி செய்யவில்லை.
இந்தச் செய்தியை இவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையும், அதன் இதய நோய் நிபுணரும் உறுதி செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை அறிந்த பிரபலங்கள் பலரும், ஷெஃபாலிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...