செய்திகள் :

ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக் குழுவில் கமல்; "தாமதமான அங்கீகாரமே..." - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

post image

திரைப்படத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்குத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல் ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Oscars
Oscars

ஆஸ்கர் விருதை வழங்குவதற்குக் கலைஞர்கள், திரைப்படங்கள் தேர்வு செய்யப்படுவதைப்போல, ஆண்டுதோறும் அந்த விருதை யாருக்கு, எந்தப் படைப்பிற்கு வழங்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் தேர்வுக் குழுவினரும் தேர்வு செய்யப்படுவர். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான தேர்வுக் குழுவில் நடிகர் கமல் ஹாசனும் பங்கேற்கிறார்.

கமல் ஹாசனுக்குத் திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது!" என்று தனது எக்ஸ் வலைதளம் மூலம் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`பாதிக்கப்பட்ட பெண்ணும் மகள்தான்; என் மகன் மீது நடவடிக்கை எடுங்கள்' -குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை

கடந்த ஜூன் 25-ம் தேதி அன்று கொல்கத்தா நகரின் சவுத் கொல்கத்தா சட்டக் கல்லூரியின் வளாகத்தில் 24 வயது மாணவி மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட விவகாரம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில்... மேலும் பார்க்க

Ground water tax: நிலத்தடி நீருக்கு வரி விதிப்பா? – மத்திய அரசு விளக்கம்!

நிலத்தடி நீர் வீணாவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தவிர்க்க மத்திய அரசு நிலத்தடி நீருக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று (ஜூன் 27) தகவல்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பலரு... மேலும் பார்க்க

"அமைச்சருக்கு இது அழகல்ல" - ராஜ கண்ணப்பனுக்கு எதிராகப் போராட்டம்; அரசியல் கட்சிகள் எச்சரிப்பது என்ன?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 4-வது நபராக வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார் ராஜ கண்ணப்பன். மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் விவகாரத்தில் மிகவும் பொறுப்பற... மேலும் பார்க்க

`காலை உணவில் பல்லி' - 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி; திருப்பூர் பள்ளியில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சிவாடியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 150 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் வழங்கப்ப... மேலும் பார்க்க

Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த பிராமணப் பத்திரம்!

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், 2022-ம் ஆண்டு ஒரு தம்பதி உட்பட மூன்று பேர் இரண்டு பெண்களை நரபலி கொடுத்து சடங்கு செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

Shanghai: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனத்தை நிராகரித்த இந்தியா!? - காரணம் என்ன?

சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா பாதுகாப்புத்துறை அமை... மேலும் பார்க்க