செய்திகள் :

நல்ல படங்களை காலம்தான் தீர்மானிக்கும்: மகிழ் திருமேனி

post image

இயக்குநர் மகிழ் திருமேனி, எது நல்ல படம் என்பதை காலம்தான் தீர்மானிக்கும் எனக் கூறியுள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2012 -இல் தடையறத் தாக்க திரைப்படம் வெளியானது.

திரையரங்கில் கவனம் பெறாமல் சென்ற இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே பின்னாள்களில் உருவானார்கள்.

இந்தப்படம் நேற்று (ஜூன் 27) மறுவெளியீடானது. ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் நல்ல திரைக்கதையுடன் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகக் கொண்டாடப்பட்டது.

Thadaiyara Thakka film poster
தடையறத் தாக்க பட போஸ்டர்.

அருண் விஜய்க்கும் திருப்புமுனை படமாக அமைந்ததுடன் இன்றுவரை மகிழ் திருமேனியின் சிறந்த படமாகவும் பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தை இயக்கியிருந்தார். அந்தப்படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து பேசியதாவது:

தடையறத் தாக்க படத்தினை திரையரங்கில் பார்த்தவர்களுடன் இணையத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்தோமானால் இந்தப்படம் அந்தாண்டு வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியிருக்கும்.

ஒரு படம் வெற்றிப் படமா இல்லையா என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். ஆனால், ஒரு படம் நல்ல படமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்றார்.

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நடிகர் அஜித்துடன் நிச்சயமாக படத்தை இயக்குவேன் எனக் கூறினார்.

எதிர்நீச்சல் தொடரை முந்திய அய்யனார் துணை: இந்த வார டிஆர்பி!

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் மருமகள் மற்றும் மூன்று முடிச்சு தொடர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. எதிர்நீச்சல் தொடரை அய்யனார் துணை சீரியல் முந்தியுள்ளது.சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள... மேலும் பார்க்க

இதயம் தொடரிலிருந்து விலகியது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு ஃபரினா பதில்!

இதயம் சீசன் 2 தொடரில் இருந்து விலகியது குறித்து விலகியது ஏன் என நடிகை ஃபரினா ஆசாத் விளக்கம் அளித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023 முதல் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலின் முதல்பாகம் கடந்த... மேலும் பார்க்க

மெஸ்ஸி, ரொனால்டோ சாதனையை முறியடித்த எர்லிங் ஹாலண்ட்!

மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.கிளப் உலகக் கோப்பையில் 3 போட்டிகளிலும் அசத்தலாக வென்று நாக் அவுட் சுற்றுக்கு மான்செஸ்டர் சிட்டி முன்னேறியிருக்கிறது. நேற்று... மேலும் பார்க்க

சூர்ய வம்சம் காட்சியை மறு உருவாக்கம் செய்த 3 பிஎச்கே படக்குழு!

சூர்ய வம்சம் காட்சியைப் போலவே 3 பிஎச்கே படக்குழு மறு உருவாக்கம் செய்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சரத்குமார் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்... மேலும் பார்க்க

மயில்சாமி மகனுடன் நடிக்கும் நடிகை பாடினி குமார்!

புதிய வெப் தொடரில் யுவன் மயில்சாமியுடன் நடிகை பாடினி குமார் நடிக்கிறார்.மறைந்த புகழ் பெற்ற காமெடி நடிகரான மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி. இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான தணியும் என்ற திரைப்படத்தில் நட... மேலும் பார்க்க

காவல் துறை அதிகாரியாக நடிக்கும் கௌதம் ராம் கார்த்திக்?

நடிகர் கௌதம் ராம் கார்த்திக், அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் என்பவரின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க