செய்திகள் :

மோகன் லால், பிரபாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘கண்ணப்பா’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

post image

நடிகர்கள் மோகன் லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ’கண்ணப்பா’ திரைப்படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு? என்பதைப் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நடித்துள்ள ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளிலும் ’பான்-இந்தியா’ திரைப்படமாக கண்ணப்பா உருவாக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க ஒரு சிவபக்தர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் மோகன் லால், பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதால் ‘கண்ணப்பா’ மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் நிலவியது.

இந்த நிலையில், இத்திரைப்படம் வெளியான முதல்நாளில் மட்டும் ரூ. 9 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், வசூல் குறித்த அதிகாரபூர்வ தகவல் படத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து இன்னும் வெளியிடப்படவில்லை.

கில்லர் படம் பூஜையுடன் துவக்கம் - புகைப்படங்கள்

படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ப்ரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடித்துள்ளார்.10 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கும் முதல் படம் கில்லர்.ஆக்‌ஷன், நகைச்சுவை மற்றும் காதல் கலந்திருக்கும் படம் இது.படத்தின்... மேலும் பார்க்க

பரந்து போ படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

பறந்து போ படம் ஜூலை 4 அன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.படத்தின் இசை... மேலும் பார்க்க

3BHK படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர்... மேலும் பார்க்க

பீனிக்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சண்டை பயிற்ச்சி இயக்குநர் அனல் அரசு இப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகுகிறார்.நடிகர் விஜய் சேதுபதி.படத்தின் டிரெய்லரை அட்லீ மற்றும் கார்த்தி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.பிரேவ... மேலும் பார்க்க

மெட்ரோ... இன் டினோ படத்தின் விளம்பரதார நிகழ்வு - புகைப்படங்கள்

படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பாலிவுட் நடிகர்கள் சாரா அலி கான் மற்றும் ஆதித்யா ராய் கபூர்.பாலிவுட் நடிகை சாரா அலி கான்.முன்னாள் கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலியுடன், 'மெட்ரோ... இன் டினோ' பட குழுவினர். மேலும் பார்க்க

டிஎன்ஏ படத்தின் வெற்றி விழா - புகைப்படங்கள்

படத்தின் நாயகன் அதர்வா மற்றும் நாயகி நிமிஷா சஜயன்.செய்தியாளர்களுடன் அதர்வா.டிஎன்ஏ படத்தின் வெற்றி விழாவில் படக்குழுவினர்.படத்தின் நாயகி நிமிஷா சஜயன்.நாயகன் அதர்வா.ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தய... மேலும் பார்க்க