செய்திகள் :

"கட்டா குஸ்தி 2, விஷ்ணு விஷாலுடன் இணைந்து 3 படங்கள்" - தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கொடுத்த அப்டேட்

post image

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷின்  வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பு நிறுவனம் 2025 to 2027 இரண்டு ஆண்டுகளுக்கான தங்களது அடுத்த 10 படங்களின் இயக்குநர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது.

அந்தப் பட்டியலில் சுந்தர் சி, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், `96', `மெய்யழகன்' இயக்குநர் பிரேம்குமார், `2018 - Everyone Is A Hero' மலையாள திரைப்பட இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப், `கனா', நெஞ்சுக்கு நீதி இயக்குநர் அருண்ராஜா காமராஜ், `போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா, `கட்டா குஸ்தி' இயக்குநர் செல்லா அய்யாவு, `டாடா', `கராத்தே பாபு' இயக்குநர் கணேஷ் பாபு ஆகிய 10 இயக்குநர்களின் படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரது தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசியிருக்கும் ஐசரி கணேஷ், "எங்களின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பில் வரவிருக்கும் 10 படங்களின் இயக்குநர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தோம்.

அதில் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து 3 படம் தயாரிக்கவிருக்கிறோம். 'பேச்சுலர்' சத்தீஸ் படம், அருண்ராஜா காமராஜ் படம் மற்றும் செல்லா அய்யாவுவின் 'கட்டா குஸ்தி 2' ஆகிய மூன்று படங்களை விஷ்ணு விஷாலோடு இணைந்து தயாரிக்கிறோம்." என்று கூறியிருக்கிறார்.

ருத்ரா, விஷ்ணு விஷால்

இந்த 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் வெற்றிமாறன், நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ராவிற்கு வாழ்த்துத் தெரிவித்துப் பேசியிருக்கின்றனர்.

ருத்ரா, சினிமாவில் கதாநாயகனாகும் கனவுடன் விஷ்ணு விஷால் தயாரித்த 'FIR, கட்ட குஸ்தி' படத்தில் தயாரிப்பிற்கான நிர்வாகப் பணிகளைப் பார்த்துக் கொண்டார். இதையடுத்துத் தற்போது விஷ்ணு விஷாலின் தயரிப்பில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிருஷ்ணகுமார் இயக்கத்தில் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தில் நடித்திருக்கிறார்.

"15 வருஷத்துக்கு முன்னாடி' வெண்ணிலா கபடி குழு' பட விழாவுல..." - விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை நடிகராகப் பலருக்கும் பரிச்சயமான கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டி... மேலும் பார்க்க

Actor Karthi: ``ஒரு அண்ணன் இருப்பது ஸ்பெஷல்தான்; அந்த வகையில் நான் ரொம்ப லக்கி!'' - கார்த்தி

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா, 'ஓ எந்தன் பேபி' படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை நடிகராகப் பலருக்கும் பரிச்சயமான கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டிர... மேலும் பார்க்க

Phoenix: ``சேது சார்கிட்ட நடிப்பு கத்துகிட்டா சூர்யா தவிர்க்க முடியாத ஹீரோ!'' - இயக்குநர் பாண்டிராஜ்

சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில், ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பீனிக்ஸ்' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை: விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா; மலர் தூவி வரவேற்ற பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வனவிலங்குகளைப் பாதுகாக்... மேலும் பார்க்க