செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: கடைசி உடலும் அடையாளம் காணப்பட்டது

post image

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவரின் கடைசி உடலும் அடையாளம் காணப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவரின் கடைசி உடலின் டிஎன்ஏ பொருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் விமான விபத்தில் காயமடைந்த மூன்று பேர் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 260 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக மருத்துவ அதிகாரிகள் இறப்பு எண்ணிக்கையை 270 ஆகக் கணக்கிட்டிருந்தனர். குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

இதில், விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர, மீதமுள்ள 241 பயணிகள் உள்பட 260 பேர் பலியாகினர். பெரும்பாலான உடல்கல் தீயில் எரிந்து நாசமாகியிருக்கும் நிலையில், உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் சடலங்கலை உறுதி செய்யும் பணி நடைபெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

summary

More than two weeks after the Ahmedabad plane crash, the DNA test has ascertained the identity of the last victim, and the death toll in the tragedy now stands at 260, officials said on Saturday.

இதையும் படிக்க... செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றம் செய்தால் பிஎஸ்பி அனுமதிக்காது: மாயாவதி

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அனுமதிக்காது என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி தெரிவித்தாா். லக்னெளவில் செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம் ‘அரசமைப... மேலும் பார்க்க

மோடி அரசின் ‘அடக்குமுறை’ கொள்கையால் முதலீட்டு மந்தநிலை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் ‘அடக்குமுறை’ கொள்கைகளின் விளைவாக முதலீட்டு மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடா்பாக அக்கட்சியன் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

பாஜக அரசால் பெயர் மாற்றப்பட்ட ஊர்கள்: புதிய வரவாக சிந்தூர்புரம்! 11 ஊர்ப் பெயர்கள் விரைவில் மாற்றம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்ற பிறகு பல முக்கிய ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் புதுவரவாக இண... மேலும் பார்க்க

புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.பிரதான கோயிலி... மேலும் பார்க்க

மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது: காங். விமர்சனம்

’அமிர்த காலம்’ என்று அரசு சொல்லிக்கொள்ளும் இக்காலக்கட்டத்தில் ’மக்களின் சேமிப்பு காலி; முதலீட்டில் வளர்ச்சி இல்லை; மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது’ என்று கா... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் இருக்கக் கூடாது: அம்பேத்கரை மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்திய தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் வரவேற்றுள்ளார்.கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மத்தி... மேலும் பார்க்க