செய்திகள் :

Phoenix: ``சேது சார்கிட்ட நடிப்பு கத்துகிட்டா சூர்யா தவிர்க்க முடியாத ஹீரோ!'' - இயக்குநர் பாண்டிராஜ்

post image

சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில், ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பீனிக்ஸ்' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. விஜய் சேதுபதி, இயக்குநர் அ.வினோத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

H.Vinoth

அ. வினோத் பேசுகையில், "ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவதற்கு 10 படங்கள் தேவைப்படும். ஆனால், சூர்யாவுக்கு அது முதல் படத்திலேயே கிடைத்திருக்கிறது. அதற்காக பெரிய கடின உழைப்பையும் நீங்கள் செலுத்தியிருக்கிறீர்கள். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறும்," என்று கூறி முடித்தார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், "நான் விஜய் சேதுபதி சாருடன் படம் பண்ணுகிறேன். அதனால் இங்கு வந்திருக்கிறேன் என்று நினைப்பார்கள். அது எல்லாம் கிடையாது. நான் சூர்யாவுக்காகத்தான் இன்று இங்கு வந்திருக்கிறேன்.

இதுவரை நான் வேலை பார்த்த ஸ்டன்ட் இயக்குநர்களில் தெளிவானவர் அனல் அரசு மாஸ்டர்தான். அதுபோல, இந்தப் படமும் ஒரு தெளிவான படமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

விஜய் சேதுபதி சாரை நான் முதன்முதலாக நேரில் பார்த்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. 'பசங்க' படத்தில் விமல் நடித்த கதாபாத்திரத்திற்கு இவரை நடிக்க வைக்கலாமா என்று இயக்குநர் ப்ரேம் குமார் அழைத்து வந்தார்.

சூர்யா சேதுபதி
சூர்யா சேதுபதி

அவருடைய முகத்தில் அப்போது அப்பாவித்தனம் இருந்தது. எப்படியாவது ஜெயித்துவிட மாட்டோமா என்று ஒரு எண்ணத்தோடு அவர் இருந்தார். 'பசங்க' படத்துக்காக நான் எதிர்பார்த்த முகம் வேறு. ஆனாலும், சேது சார், 'பரவாயில்லை சார், ஏதாவது ஒரு கேரக்டர் கொடுங்கள்.

நான் பண்ணுகிறேன்,' என்று சொன்னார். அப்படி ஒரு சீன் பண்ணி, எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. சூர்யாவை நான் முதல் முறையாக சந்தித்த சமயத்தில், அவரிடம் அப்பாவித்தனம் சுத்தமாக இல்லை. ஆனால், அவரிடம் ஒரு தெளிவு இருந்தது.

'சண்டக்கோழி' படத்தில் விஷால் சாரைப் பார்க்கும்போது எப்படியான ஒரு நம்பிக்கை வந்ததோ, அதே நம்பிக்கை சூர்யா மீது இந்தப் படம் பார்க்கும்போது வருகிறது. அவர் தன் அப்பா மாதிரி நடிக்கக் கற்றுக்கொண்டு, நிச்சயமாக சூர்யா தவிர்க்க முடியாத ஹீரோவாக வந்துவிடுவார்." என்று பேசினார்.

Actor Karthi: ``ஒரு அண்ணன் இருப்பது ஸ்பெஷல்தான்; அந்த வகையில் நான் ரொம்ப லக்கி!'' - கார்த்தி

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா, 'ஓ எந்தன் பேபி' படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை நடிகராகப் பலருக்கும் பரிச்சயமான கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டிர... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை: விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா; மலர் தூவி வரவேற்ற பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வனவிலங்குகளைப் பாதுகாக்... மேலும் பார்க்க

Phoenix: "வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள" - மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் உருவான பீனிக்ஸ் - வீழான் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெற்றது. "என் பையன் விஷயங்களை அவன்தான் முடிவு செய்யணும்"இதில் கலந்துகொண்டு மகன் பற்றிப... மேலும் பார்க்க

Phoenix: "ரொம்ப வீக்கா ஃபீல் பண்ணினேன்..." - மனம் திறந்த சூர்யா சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் அனல் அரசு இயக்கியுள்ள பீனிக்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சூர்யா சேதுபதி, "இந்த 2 வருஷ ப்ராசஸ்ல, நிறைய சர்ச்சைகள... மேலும் பார்க்க