செய்திகள் :

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி: வெளியீடு எப்போது?

post image

விஜய் சேதுபதி நடித்துள்ள தலைவன் தலைவி படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு நாளை(ஜூன் 29) அறிவிக்கிறது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலைவி படம் உருவாகியுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலாக வெளியான பொட்டல மொட்டாயே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடலை தற்போதுவரை 68 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தின் வெளியீட்டுத் தேதி நாளை(ஜூன் 29) காலை 11.11 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

The team will announce the release date of Vijay Sethupathi's Thalaivan Thalaivi tomorrow (June 29).

இதையும் படிக்க: மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பறந்து போ படத்தை எடுக்க இதுதான் காரணம்: இயக்குனர் ராம்

அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்துதான் பறந்து போ படத்தை எடுத்ததாக இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் ந... மேலும் பார்க்க

மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படம் திரையரங்குகளில்... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் தொடரை முந்திய அய்யனார் துணை: இந்த வார டிஆர்பி!

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் மருமகள் மற்றும் மூன்று முடிச்சு தொடர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. எதிர்நீச்சல் தொடரை அய்யனார் துணை சீரியல் முந்தியுள்ளது.சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள... மேலும் பார்க்க

இதயம் தொடரிலிருந்து விலகியது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு ஃபரினா பதில்!

இதயம் சீசன் 2 தொடரில் இருந்து விலகியது குறித்து விலகியது ஏன் என நடிகை ஃபரினா ஆசாத் விளக்கம் அளித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023 முதல் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலின் முதல்பாகம் கடந்த... மேலும் பார்க்க

மெஸ்ஸி, ரொனால்டோ சாதனையை முறியடித்த எர்லிங் ஹாலண்ட்!

மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.கிளப் உலகக் கோப்பையில் 3 போட்டிகளிலும் அசத்தலாக வென்று நாக் அவுட் சுற்றுக்கு மான்செஸ்டர் சிட்டி முன்னேறியிருக்கிறது. நேற்று... மேலும் பார்க்க