செய்திகள் :

மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

post image

மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார்.

மேலும், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஷெல்லி, கீதா கைலாசம் மற்றும் பானுபிரியா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படம் ஜூன் 6 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், மெட்ராஸ் மேட்னி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: எதிர்நீச்சல் தொடரை முந்திய அய்யனார் துணை: இந்த வார டிஆர்பி!

பறந்து போ படத்தை எடுக்க இதுதான் காரணம்: இயக்குனர் ராம்

அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்துதான் பறந்து போ படத்தை எடுத்ததாக இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் ந... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி: வெளியீடு எப்போது?

விஜய் சேதுபதி நடித்துள்ள தலைவன் தலைவி படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு நாளை(ஜூன் 29) அறிவிக்கிறது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில்... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் தொடரை முந்திய அய்யனார் துணை: இந்த வார டிஆர்பி!

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் மருமகள் மற்றும் மூன்று முடிச்சு தொடர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. எதிர்நீச்சல் தொடரை அய்யனார் துணை சீரியல் முந்தியுள்ளது.சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள... மேலும் பார்க்க

இதயம் தொடரிலிருந்து விலகியது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு ஃபரினா பதில்!

இதயம் சீசன் 2 தொடரில் இருந்து விலகியது குறித்து விலகியது ஏன் என நடிகை ஃபரினா ஆசாத் விளக்கம் அளித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023 முதல் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலின் முதல்பாகம் கடந்த... மேலும் பார்க்க

மெஸ்ஸி, ரொனால்டோ சாதனையை முறியடித்த எர்லிங் ஹாலண்ட்!

மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.கிளப் உலகக் கோப்பையில் 3 போட்டிகளிலும் அசத்தலாக வென்று நாக் அவுட் சுற்றுக்கு மான்செஸ்டர் சிட்டி முன்னேறியிருக்கிறது. நேற்று... மேலும் பார்க்க