செய்திகள் :

Tourist family: `ஆட்டோவில் கிடைத்த மகிழ்ச்சி, அளவிட முடியாது' -இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்சி

post image

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் ஆட்டோவில் பயணித்த போது, அங்கு நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அறிமுக இயக்குனரான அபிஷன் ஜீவிந்த், சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர் ஆகிய நடிகர் பட்டாளத்தை வைத்து டூரிஸ்ட் ஃபேமிலி என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி ஜனரில் மக்களுக்கு எடுத்துக்காட்டிருந்தனர்.

இந்த படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Tourist Family
Tourist Family

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், ஆட்டோவில் பயணித்த போதும், பொது மக்களிடம் அந்த படம் எப்படி போய் சேர்ந்திருக்கிறது என்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, ”நான் மாஸ்க் அணிந்து கொண்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​ அண்ணா (ஆட்டோ டிரைவர்) திடீரென்று யூடியூப்பில் "முகை மழை" பாடலைப் போட்டார். என் முகம் உடனடியாக பிரகாசித்தது, அவரிடம் படம் பிடித்திருக்கிறதா என்று நான் கேட்டேன். அவர், உடனே நான் டூரிஸ்ட் ஃபேமிலியை தியேட்டரில் மூன்று முறை பார்த்தேன். என் கைகளைப் பாருங்கள்! இந்தப் படத்தைப் பற்றிப் பேசுவதே எனக்கு மெய்சிலிர்ப்பை தருகிறது. அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என்றார்.

அபிஷன் ஜீவிந்த்
அபிஷன் ஜீவிந்த்

பின்னர் அவர் சசிகுமார் சாரின் கதாபாத்திரத்துடன் எவ்வாறு ஆழமாக இணைந்திருக்கிறார் என்பதைப் பற்றிப் பேசத் தொடங்கினார். குடும்பத்தின் எதிர்காலத்திற்காக கடுமையாகப் போராடிய தனது சொந்த தந்தையுடன் ஒப்பிட்டார். அவரது தந்தை இப்போது இல்லை, படத்தைப் பார்த்ததும் நினைவுகள் வந்ததாக, உணர்ச்சிவசப்பட்டு, கொஞ்சம் உடைந்து போனார்.

நான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் என்று அவரிடம் சொன்னபோது, ​​அவர் மகிழ்ச்சியில் மூழ்கி, படத்தின் மீதான தனது அன்பை முழு மனதுடன் வெளிப்படுத்தினார்.

என்ன ஒரு தருணம்! உங்கள் சிறிய பங்களிப்பினால் ஒருவர் புன்னகைக்கிறார், குணமடைகிறார் அல்லது ஆழமாக உணர்கிறார் என்பதை நீங்கள் உணரும்போது அந்த வகையான மகிழ்ச்சி உண்மையிலேயே அளவிட முடியாதது” என்று அந்த ஆட்டோ ஓட்டுநருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ந்தார் அபிஷன் ஜீவிந்த்.

`விகடனுக்கு நன்றி... இந்த புகைப்படத்தை எடுத்தது VJS' - நெகிழ்ந்த ஜி.வி பிரகாஷ்குமார்

ஆனந்த விகடனின் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை ) விருதை ஜி.வி பிரகாஷ் வென்றுள்ளார். நேற்று சென்னையில் ஆனந்த விகடன் 2024 ஆம் ஆண்டுக்கான சினிமா விருது விழா நடைபெற்றது. இதில் சிறந்த... மேலும் பார்க்க

நயன்தாரா - விக்னேஷ் சிவன்: "என் ஆன்மா விரும்பிய அனைத்தும் நீ தான்" - திருமண நாள் பகிர்வு!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். திருமண நாள் ஸ்பெஷலாக கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கும் புகைப்படங்களை நெகிழ்ச்சியான வரிகளுடன் பகிர்ந்துள்ளார் நயன்... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 07 : 'சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கு' - படாபட் ஜெயலட்சுமி நினைவுகள்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல கண்களுக்கு இதமா ஓர் அழகான மூன்றாம் பிறை போல, சீக்கிரமே புகழ், வெகு சீக்கிரமே மரணம்னு ஜொலிச்சி மற... மேலும் பார்க்க

Thug Life: டிரெண்டிங்கில் இருக்கும் ”முத்த மழை” பாடலை பாடிய மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜின் மகள்!

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. ’நாயகன்’ படத்திற்கு பிறகு கிட்டதட்ட 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹா... மேலும் பார்க்க

Thug Life: கன்னட மொழி விவகாரம்; நேரடியாக மன்னிப்பு கேட்காத கமல் - படம் வெளியாவதில் சிக்கல்!

‘தக் லைஃப்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் "தமிழ் மொழியிலிருந்து தான் கன்னடம் பிறந்ததாக” கருத்து தெரிவித்தது, பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வர் உள்பட ப... மேலும் பார்க்க

ஹேமா கமிட்டி அறிக்கை: `அவசரம் இல்லையா?' - கேரள அரசு குறித்து நடிகை பார்வதி விமர்சனம்!

ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு கையாளும் விதம் குறித்து நடிகை பார்வதி திருவோத்து தனது சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகை பார்வதி குறிப்பிட்டதாவது "முதல்வர் பினராயி வ... மேலும் பார்க்க