செய்திகள் :

Thug Life: டிரெண்டிங்கில் இருக்கும் ”முத்த மழை” பாடலை பாடிய மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜின் மகள்!

post image

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

’நாயகன்’ படத்திற்கு பிறகு கிட்டதட்ட 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்திருப்பது மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதன்படி நாளை ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளை படக்குழு செய்து வருகிறது.

இந்த நிலையில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜின் மகள் சாரா, 'தக் லைஃப்' படத்தில் இடம்பெற்ற 'முத்தமழை' பாடலை பாடிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் பகிர்ந்து கொண்டார்.

இந்த வீடியோவில் ஜோஜு ஜார்ஜ் காரில் சென்று கொண்டிருக்கும் போதே அவரின் மகளும், அவரும் இணைந்து முத்தமழை பாடலை பாடுகின்றனர். வீடியோவின் இறுதியில் 'தக் லைஃப்' திரைப்படம் நாளை வெளியாவது குறித்தும் ஜோஜு ஜார்ஜ் குறிப்பிடுகிறார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜுக்கு தமிழில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளியான ”பனி” என்ற படத்தில் மூலம் இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பு “தக் லைஃப்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் பலரையும் மெய் மறக்க வைத்தது.

Thug Life: கன்னட மொழி விவகாரம்; நேரடியாக மன்னிப்பு கேட்காத கமல் - படம் வெளியாவதில் சிக்கல்!

‘தக் லைஃப்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் "தமிழ் மொழியிலிருந்து தான் கன்னடம் பிறந்ததாக” கருத்து தெரிவித்தது, பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வர் உள்பட ப... மேலும் பார்க்க

ஹேமா கமிட்டி அறிக்கை: `அவசரம் இல்லையா?' - கேரள அரசு குறித்து நடிகை பார்வதி விமர்சனம்!

ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு கையாளும் விதம் குறித்து நடிகை பார்வதி திருவோத்து தனது சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகை பார்வதி குறிப்பிட்டதாவது "முதல்வர் பினராயி வ... மேலும் பார்க்க

Chinmayi: ``கர்மாவும் கடவுளும்.. பதிலடி கொடுக்கட்டும்'' - பாடகி சின்மயி முகநூல் பதிவு வைரல்

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் `முத்த மழை' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்அடித்திருக்கிறது. இந்தப் பாடலை தமிழில் பாடகி தீ (Dhee) பாடியுள்ளார். ஆனால், சமீபத்... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 06: `வீடு தான் சொர்க்கம்; எனக்கு உறவுகள் முக்கியம்!' - நடிகை லதா பர்சனல்ஸ்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவ... மேலும் பார்க்க

`எங்க மனநிலையையும் புரிந்துக்கொள்ளுங்கள்!’ - குழந்தை குறித்த கேள்விகளுக்கு சாந்தனு - கிகி பதில்

இயக்குநர் பாக்கியராஜ், நடிகை பூர்ணிமா ஆகியோரின் மகன் சாந்தனு. இவர் தமிழ் சினிமாவில் சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் சித்து பிளஸ் 2, அம்மாவின் கைபேசி, இராவண கோட்டம் என... மேலும் பார்க்க

Madhimitha: 'கண்மணி அன்புடன்' சீரியல் நடிகை மதுமிதா போட்டோஷூட் ஸ்டில்ஸ் | Photo Album

Manidhargal Review: அசத்தல் மேக்கிங்; ஆனால் அதீத எமோஷன்; மனதிற்கு நெருக்கமாகிறார்களா இந்த மனிதர்கள்?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்... மேலும் பார்க்க