செய்திகள் :

தவெக vs தவாக : 'இதுதான் தமிழர் பண்பாடா?; சாடும் வேல்முருகன்; பதிலடி கொடுக்கும் தவெக தொண்டர்கள்!'

post image

'தவெக vs தவாக மோதல்!'

தவெக தொண்டர்களுக்கும் தவாக தலைவர் வேல்முருகனுக்கும் இடையேயான மோதல் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. விஜய்யின் தொண்டர்கள் வேல்முருகனை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வேல்முருகனும் அதற்கான பதிலடியை கொடுத்து வருகிறார். பிரச்சனை எங்கிருந்துதான் தொடங்கியது?

விஜய்
விஜய்

'கல்வி விழாவை விமர்சித்த வேல்முருகன்!'

சேலத்தில் தவாக கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், 'விஜய், அஜித், ரஜினி, சரத்குமார், சத்யராக் படங்களை பாருங்கள். பாராட்டுங்கள். அதைவிட்டு 2 கிராம் தங்கம் கொடுக்கிறார் என்றவுடன் பெண் பிள்ளைகளை அந்த நடிகரின் நிகழ்ச்சிக்கு ஏன் அழைத்து செல்கிறீர்கள்? எப்படி பெற்றோர்கள் இதையெல்லாம் அனுமதிக்கிறீர்கள்? இதுதான் தமிழர் பண்பாடா?

எனக்கு திராவிட கட்சிகளின் லஞ்ச லாவண்யம் மீதும் குடும்ப அரசியலின் மீதும் விமர்சனம் உண்டு. ஆனால், சினிமாக்காரர்களை ஒப்பிடும்போது தமிழகம் வளர்ந்ததில் திராவிடக் கட்சிகளின் பங்கும் இருக்கதான் செய்கிறது என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.' எனப் பேசியிருந்தார்.

'தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா!' என்ற பெயரில் 10, 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்ணை எடுத்த மாணவ மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். இதை விமர்சிக்கும் வகையில்தான் வேல்முருகன் பேசியிருந்தார்.

'தவெக அறிக்கை!'

வேல்முருகனின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரல் ஆக, தவெக தொண்டர்கள் வேல்முருகனை அட்டாக் செய்ய ஆரம்பித்தனர். இந்த சமயத்தில் தவெக சார்பில் வேல்முருகனை கண்டித்து, 'வாழ்வுரிமைக் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை நடத்திக்கொண்டு, தி.மு.க.வில் உறுப்பினர் அட்டை வாங்கிக்கொண்டு, தேர்தலில் அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு, தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு.வேல்முருகன் அவர்களே.

வேல்முருகன்
வேல்முருகன்

தமிழகப் பெண்களையும் பெண் குழந்தைகளையும் அவமரியாதையாகப் பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது? இதைத் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரான சகோதரி திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் எப்படிக் கண்டும் காணாமல் மவுனமாக இருக்கிறார்? பெண்களை இழிவாகப் பேசும் இதுபோன்ற மலிவான மனநிலை கொண்டவர்களைக் கண்டித்திருக்க வேண்டாமா? அப்பா என்று தன்னை அழைத்து மகிழும் தமிழக முதலமைச்சர் இதைக் கண்டித்திருக்க வேண்டாமா? தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரல்லவா, இந்த அவதூறு மற்றும் வக்கிர மனப் பேச்சாளர்? இதற்குத் தி.மு.க.வின் பதில் என்னவென்று தமிழகப் பெண்கள் உற்று நோக்கிக் கொண்டுள்ளனர்.' என அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

விஜய் குறித்து வேல்முருகன் தரம் தாழ்ந்து விமர்சித்துவிட்டார். அதனால் அவர் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் என தவெக தொண்டர்கள் சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட தொடங்கினர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
வேல்முருகன்

இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த வேல்முருகன், ''சேலத்தில் கட்சி நிகழ்ச்சியில் 1 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு பேசியதில் வெட்டி ஒட்டி சில பகுதிகளை மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள். நான் நிறைய விஷயங்களை பேசியிருந்தேன். அதையெல்லாம் விட்டுவிட்டார்கள். ஒரு நடிகனை கட்டிப்பிடித்து முத்தமிட்டால் போதும் என் வாழ்நாள் பயனையே அடைந்துவிடுவேன் என நம் பெண் பிள்ளைகள் சொல்கிறார்கள். அதைத்தான் நான் கண்டித்தேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென அறிக்கை விடுவது, சமூகவலைதளங்களில் அவதூறாக பேசுவது எதுவுமே என்னிடம் வேலைக்கு ஆகாது. நான் ஒன்றிய அரசின் ஆதிக்கத்தை எதிர்த்து தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராடிய போராளி குழுக்களிலிருந்து வந்தவன்.' என்றார்.

விஜய்
விஜய்

இருதரப்பும் மாறி மாறி பதிலடிகளை கொடுத்து வருகின்றனர். விஜய்க்கும் வேல்முருகனுக்குமான உரசல் இப்போது தொடங்கியது அல்ல. 2014 இல் விஜய்யின் கத்தி படம் வெளியாகவிருந்த சமயத்தில் அந்தப் படத்தை வெளியிடக் கூடாதென வேல்முருகன் கடுமையாக போராடியிருந்தார். விஜய் கட்சி தொடங்கிய பிறகுமே தவெக, தவாக இரண்டு கட்சிகளுமே ஆங்கிலத்தில் TVK என பயன்படுத்துவதும் சர்ச்சையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ஆற்றல் அசோக் குமார்?

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது... தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.அக்கட்சியின் முக்கியப் பொற... மேலும் பார்க்க

Census - Delimitation: "ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - எச்சரிக்கும் ஸ்டாலின்

இந்தியாவில் 2011-க்குப் பிறகு 14 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்... மேலும் பார்க்க

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

சரிபெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த வழக்கில், ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ள நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகள... மேலும் பார்க்க

புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்... தாக்குதல்கள் ஒரு பக்கம்... என ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்... மேலும் பார்க்க

PMK: "விரைவில் நல்ல செய்தி; ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு..." - ஜி.கே மணி சொல்வது என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்த... மேலும் பார்க்க