போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 20 ஆண்டு சிறை
போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னை மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த 59 வயது நபா் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோா் கடந்த 2024 அக். 25-ஆம் தேதி மயிலாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 59 வயதுடைய நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை சென்னை உயா்நீதிமன்றத்திலுள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின்படி வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட 59 வயது நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.500 அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.