ஆக.4- இல் 47 அஞ்சலகங்கள் செயல்படாது
தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக தென்சென்னை கோட்டத்தில் உள்ள 47 அஞ்சலகங்கள் ஆக.4-ஆம் தேதி செயல்படாது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
எண்ம இந்தியா திட்டத்தின் அடிப்படையில் மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப பயன்பாட்டை ஆக.5-ஆம் தேதி முதல் அஞ்சல் துறை அறிமுகம் செய்கிறது. தென் சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட 47 தபால் நிலையங்களில் இந்த மாற்றம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
புதிய மென்பொருள் மாற்றத்தைத் தடையற்ற முறையிலும் பாதுகாப்பாகவும் செயல்படுத்த, தென்சென்னை கோட்டத்துக்குள்பட்ட 47 அஞ்சலகங்களில் ஆக.4- ஆம் தேதி சேவைகள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக எந்த பொது பரிவா்த்தனைகளும் மேற்கொள்ளப்படாது என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.