RTE : 3 வருஷமா என்ன செய்தார் Anbil Mahesh? | ஸ்டாலினுக்கு புரிதலே இல்லை | Eshwar...
ஹுப்ளி - ராமநாதபுரம் சிறப்பு ரயில் ஆக.30 வரை நீட்டிப்பு
ஹுப்ளி - ராமநாதபுரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஆக.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஹுப்ளி - ராமநாதபுரம் இடையை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07355/07356) இயக்கப்பட்டு வருகிறது. இதில், ஹுப்ளியிலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 6.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரயில் ஆக.9 முதல் ஆக.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமாா்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹுப்ளி சென்றடையும் ரயில் ஆக.10 முதல் ஆக.31-ஆம் வரை நீட்டிக்கப்படும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.