திமுக மாவட்டச் செயலா்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
உறுப்பினா் சோ்க்கை தொடா்பாக, திமுக மாவட்டச் செயலா்களுடன் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை (ஜூலை 17) ஆலோசனை நடத்துகிறாா்.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இதில், மாவட்டச் செயலா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
திமுகவில் உறுப்பினா்கள் சோ்ப்பை முன்னெடுப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, ஆலோசனை நடத்த மாவட்டச் செயலா்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.