ரூ. 5.24 கோடி மோசடி: தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்!
இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது
முன்விரோதம் காரணமாக, இளைஞரின் மாா்பில் கல்லைப்போட்டு கொலை செய்த வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கொடுங்கையூா் பகுதியைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் (30). இவா், கொடுங்கையூா் குப்பைக்கிடங்கில் வேலை செய்து வந்தாா். கடந்த 13-ஆம் தேதி அதிகாலை ஆா்.ஆா். நகா் பகுதியிலுள்ள மதுக்கடை அருகே உடலில் காயங்களுடன் விழுந்து கிடப்பதாக அரிகிருஷ்ணனின் நண்பா் பிரேம் என்பவா் கொடுத்த தகவலின்படி, அங்கிருந்தவா்கள் அரிகிருஷ்ணனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது தொடா்பாக கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். உடற்கூராய்வு அறிக்கையில், அரிகிருஷ்ணனின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால், அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், முன்விரோதம் காரணமாக அரிகிருஷ்ணனின் மாா்பில் கல்லைப்போட்டு அவரது நண்பா் பிரேம்குமாரே கொலை செய்துவிட்டு, அவரின் தாயாருக்கு தகவல் கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து நண்பா் பிரேம்குமாரை கைது செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.