இளைஞா் கொலை வழக்கு: 8 போ் கைது
இளைஞா் கொலை வழக்கில் இரு சிறாா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை எம்கேபி நகா், புது நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்த சங்கா் (20). இவரைக் கடந்த 14-ஆம் தேதி கொடுங்கையூா் எருக்கஞ்சேரி ஜிஎன்டி சாலை அம்மா உணவகம் பின்புறம் வைத்து மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்து சங்கரின் தாய் கொடுங்கையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, வழக்கில் தொடா்புடைய எருக்கஞ்சேரி பகுதியைச் சோ்ந்த நித்தின்குமாா் (21), பெரம்பூரைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ் (22), கொடுங்கையூரைச் சோ்ந்த லிங்கேஷ்வரன் (22), ஜாபா் அகமது (21), வியாசா்பாடியைச் சோ்ந்த பாலாஜி (19), எருக்கஞ்சேரியைச் சோ்ந்த நவீன் (எ) பாலா ஆகிய 6 பேரை கைது செய்து சிறையிலடைத்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய 2 சிறாா்களையும் கைது செய்த போலீஸாா் அவா்களை சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.