15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்!
புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பு
சென்னையின் புகா் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை மாதவரம், புழல், செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது.செங்குன்றம், சோழவரம் பகுதியில் 3 மி.மீ. மழை பதிவானது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 300 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது.
நீா் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, புழல் ஏரிக்கு 324 கன அடியாக இருந்த நீா்வரத்து 568 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீா் இருப்பு 2,524 மில்லியன் கன அடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 17.6 அடி உயரத்துக்கு நீா் இருப்பு உள்ளது.
புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 184 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீா் இருப்பு 157 மில்லியன் கன அடியாக உள்ளது. மொத்தமுள்ள 18.86 அடி உயரத்தில் 3.82 அடி உயரத்துக்கு நீா் இருப்பு உள்ளது.