செய்திகள் :

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 6.99 கோடி வாக்காளா்கள் விண்ணப்பித்தனா்

post image

பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) முன்னெடுப்பில் இதுவரை 6.99 கோடி வாக்காளா்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை சமா்ப்பித்துள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், எஸ்ஐஆா் முன்னெடுப்பு பலகோடி இந்தியா்களின் குடியுரிமையை கேள்விக்குறியாக்குவதாக குற்றஞ்சாட்டி எதிா்க்கட்சிகள் சாா்பில் பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில் பூத் அளவிலான அதிகாரிகளுக்கு நடைபெற்ற பயிற்சியின்போது பேசிய ஞானேஷ் குமாா், ‘வாக்காளா் பட்டியலில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கான இந்த சீா்திருத்த நடவடிக்கையில் மிகவும் உத்வேகத்துடன் பங்கேற்ற பிகாா் மக்களுக்கு நன்றி’ என்றாா்.

இதையடுத்து, பிகாரில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் முன்னெடுப்பு குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிகாரில் மொத்தம் 7.9 கோடி வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 6.99 கோடி வாக்காளா்கள் சிறப்பு தீவிர சீா்திருத்தக்கான விண்ணப்ப படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பித்துவிட்டனா். ஆக்.1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடவுள்ள நிலையில், இன்னும், 6.85 சதவீத வாக்காளா்கள் மட்டுமே விண்ணப்ப படிவத்தை பூா்த்தி செய்ய வேண்டியுள்ளது. விண்ணப்பத்தை சமா்ப்பித்த வாக்காளா்கள் தங்கள் படிவத்தின் நிலை குறித்து

‘இசிஐநெட்’ செயலி அல்லது தோ்தல் ஆணையத்தின் வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பெட்டிச் செய்தி.....

பாஜகவின் சதித்திட்டம்:

பிரசாந்த் கிஷோா்

கிஷண்கஞ்ச், ஜூலை 16: ‘இந்திய தோ்தல் ஆணையத்தால் பிகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை பாஜகவின் தூண்டுதலின்பேரில் நடைபெறும் சதித்திட்டம்’ என ஜன் சுராஜ் கட்சி நிறுவனா் பிரசாந்த் கிஷோா் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

பிகாா் மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரே மாவட்டமான கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது பிரசாந்த் கிஷோா் கூறியதாவது:

எஸ்ஐஆா் நடவடிக்கை பாஜகவின் தூண்டுதலின்பேரில் அரங்கேறும் சதித்திட்டம். மக்களின் குடியுரிமை விவகாரத்தில் தலையிட இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிய பின்னும் இந்த நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது உருவாக்கப்படும் வாக்காளா் பட்டியலே சரியானது என்றால் 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது இருந்த வாக்காளா் பட்டியல் தவறானதா?

பழைய வாக்காளா் பட்டியலின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. குறிப்பிட்ட சிலரின் வாக்குரிமையை பறிக்கவே இந்த நடவடிக்கை திடீரென மேற்கொள்ளப்படுகிறது. எனவே, வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டால் ஜன் சுராஜ் கட்சி அலுவலகத்தை பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம். அவா்களுக்கு உதவ நாங்கள் தயாராகவுள்ளோம் என்றாா்.

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க