செய்திகள் :

விஜயகாந்த் பிறந்த நாளில், அவர் பிறந்த ஊரில் தவெக-வின் மாநில மாநாடு! - பந்தக்கால் நடும் விழா

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து மாநாட்டுக்கான பந்தக்கால் விழா இன்று காலை சிறப்பாக நடந்தது.

பந்தக்கால் நடும் விழா

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடந்தது.

இதனையடுத்து மாநாட்டிற்கு அனுமதி வேண்டி மதுரை மாவட்ட காவல் கண்கானிப்பாளரிடம் ஆனந்த் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், "தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடத்துவதாக எங்கள் தலைவர் அறிவித்திருக்கிறார். இன்று காவல்துறையினரிடம் அனுமதி வேண்டியும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி-யிடம் மனு

கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு இடையூறு இல்லாமல் மாநாட்டை சிறப்பாக நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், நிச்சயம் இது வெற்றி மாநாடாக இருக்கும்.

தலைவர் எதைத் தொட்டாலும் வெற்றியாகத்தான் இருக்கும். முதல் மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்களைவிட இரண்டாவது மாநில மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மைதானம் அமைந்துள்ளது. தமிழ்நாடு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாக இருக்கும்" என தெரிவித்தார்.

பந்தக்கால் நடும் விழா

"அரசியல் மாநாடென்றாலே அது மதுரையில் நடத்தினால்தான் மக்கள் மத்தியில் கவனம் பெறும் என்ற வரலாற்றுப்பூர்வமான நம்பிக்கையுடன் நடத்துகிறார்கள். அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 25 ஆம் தேதி தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாள் என்பதாலும், அவர் பிறந்த மதுரையில் தன் கட்சியின் மாநாட்டை நடத்துவதன் மூலம் சென்ட்டிமென்ட்டாக சில மூவ்களைச் செய்வார்" என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

'இவ்வளவு அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா?'- விசிக, கம்யூனிஸ்டுகளை விளாசும் எடப்பாடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!' என்ற பெயரில் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இன்று சிதம்பரத்தில் நடந்த பிரசாரத்தில் பேசியவர் திமுக கூட்டணி கட்சிகளை ... மேலும் பார்க்க

ப வடிவ பள்ளி இருக்கைகள்: "மருத்துவர்களைக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கணும்" - ஓபிஎஸ் வலியுறுத்தல்

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைகள் குறித்து மருத்துவர்களைக் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி, முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் ... மேலும் பார்க்க

`அதே டெய்லர்... அதே வாடகை..!’ - எடப்பாடியின் Bye Bye பாலிடிக்ஸின் `ஆந்திர’ பின்னணி என்ன?

வழக்கமாக தேர்தல் வந்துவிட்டால், கட்சியினரை களத்தில் இறக்கிவிட்டு களநிலவரத்தை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வார்கள் அரசியல் கட்சியின் தலைவர்கள். ஆனால், தற்போது அந்த காலமெல... மேலும் பார்க்க

Ukraine War: "இந்தியா, சீனா, பிரேசில் மீது தடை விதிக்கப்படும்" - எச்சரிக்கும் நேட்டோ!

இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகள் ரஷ்யா உடன் தொடர்ந்து வணிக உறவுகளைப் பேணுவதனால் இவற்றின்மீது இரண்டாம் நிலை பொருளாதார தடைகள் போடப்படும் என எச்சரித்துள்ளார் NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே. அமெர... மேலும் பார்க்க

'இப்படி ஒரு தேர்தல் வரலாறு... இதில் என்னைப் பற்றி ஸ்டாலின் பேசலாமா?' - எடப்பாடி பழனிசாமி பதிலடி

எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " திரு. ஸ்டாலின் அவர்களே... நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் - திமுக தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு!- அன்புமணி விமர்சனம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை பாமக தலைவர் அன்புமணி விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " ஸ்டாலினின் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியால்... மேலும் பார்க்க