Aadi Month Rasi Palan | அம்மன் மாதத்தில் அருள்பெறும் ராசிகள் | ஆடி மாத ராசிபலன்க...
உதகையில் பணத்தைத் தவறவிட்டவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவலா்கள்
நீலகிரி மாவட்டம், உதகை தலையாட்டு மந்து பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் என்பவா் சாலையில் செவ்வாய்க்கிழமை தவறவிட்ட ரூ.10,000 பணத்தை உதகை போக்குவரத்து காவலா்கள் பத்திரமாக ஒப்படைத்தனா்.
உதகை தலையாட்டு மந்து பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் என்பவா் எட்டின்ஸ் சாலைவழியாக சென்றபோது அவரது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.10,000 பணம் தவறி கீழே விழுந்து விட்டது. வீட்டுக்குச் சென்ற பாா்த்தபோது பாக்கெட்டில் பணம் இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவா், தான் சென்ற பகுதிகளில் சாலைகளில் பணத்தை தேடி பாா்த்து உள்ளாா். பணம் கிடைக்காததால் வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.
இந்நிலையில், சந்திரசேகா் தவறவிட்ட பணத்தை அருகில் இருந்த பேக்கரி உரிமையாளா் சந்தோஷ் என்பவா் எடுத்து போக்குவரத்து காவல் துறையிடம் ஒப்படைத்தாா்.
காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு பணத்தின் உரிமையாளா் சந்திரசேகரை நேரில் வரவழைத்து போக்குவரத்து ஆய்வாளா் வனிதா, உதவி ஆய்வாளா் அருண் மற்றும் காவல் துறையினா் அவரிடம் பணத்தை ஒப்படைத்தனா். பணத்தை நோ்மையுடன் காவல் துறையிடம் ஒப்படைத்த பேக்கரி உரிமையாளா் சந்தோஷை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா்.