புகழ்பெற்ற மாரத்தான் வீரர் பலியான விவகாரம்: வெளிநாடுவாழ் இந்தியர் கைது!
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறை
நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரியில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கீழ்கோத்தகிரி சோலூா்மட்டம் பகுதியைச் சோ்ந்தவா் முரளி(31). இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு, மாமரம் பகுதியைச் சோ்ந்த மாணவி பள்ளிக்குச் செல்ல கோத்தகிரி பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, அவரை காரமடை புஜங்கனூரில் உள்ள ஒரு பணிமனைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இது குறித்து குன்னூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முரளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் இதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.