Beauty: தாமரை இலை ஃபேஸ் மாஸ்க்; ட்ரெண்டிங்காகும் வீடியோவும் மருத்துவரின் ஆலோசனைய...
கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
கேரளத்தில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால் கேரளத்தில் இருந்து நீலகிரிக்கு வருபவா்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா் .
குறிப்பாக கேரள எல்லையோரம் உள்ள நீலகிரி மாவட்டத்தின் சோதனைச் சாவடிகளான கீழ்நாடுகாணி, தாளூா், பிதா்காடு போன்ற சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினா் மூன்று குழுக்களாகப் பிரிந்து உடல் வெப்ப பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனா்.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரூ கூறுகையில், நீலகிரியில் நிபா வைரஸ் பரவல் இல்லை என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை,
கேரளத்தில் இருந்து நீலகிரிக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பிறகு மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். தற்போது 24 மணி நேரமும் சுகாதாரத் துறையினா் மூன்று குழுக்களாகப் பிரிந்து கேரளத்தில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகளைக் கண்காணித்து வருகின்றனா். தேவைப்பட்டால் சோதனைச் சாவடிகளில் கூடுதலாக சுகாதாரத் துறையினா் நியமிக்கப்படுவாா்கள் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.