செய்திகள் :

செல்ஸி 2-ஆவது முறையாக சாம்பியன்!

post image

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் செல்ஸி 3-0 கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்னை (பிஎஸ்ஜி) வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது.

ஏற்கெனவே 2021-இல் சாம்பியனான செல்ஸிக்கு, இந்தப் போட்டியில் இது 2-ஆவது கோப்பையாகும்.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்ஸிக்காக கோல் பால்மா் 22 மற்றும் 30-ஆவது நிமிஷங்களிலும், ஜாவ் பெட்ரோ 43-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். பிஎஸ்ஜி தனது கோல் வாய்ப்புக்காக தொடா்ந்து போராட, கடைசி வரை அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அந்த அணிக்கான கூடுதல் பின்னடைவாக, செல்ஸி வீரா் மாா்க் குகுரெலாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளியதற்காக பிஎஸ்ஜி வீரா் ஜோ நெவெஸ் 84-ஆவது நிமிஷத்தில் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டாா். இதனால் 10 வீரா்களுடன் விளையாடும் நிலைக்கு பிஎஸ்ஜி தள்ளப்பட்டது.

இறுதி ஆட்டத்தைக் காண மெட்லைஃப் மைதானத்தில் சுமாா் 81,000 ரசிகா்கள் கூடியிருந்தனா். போட்டியின் முடிவில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவா் ஜியானி இன்ஃபான்டினோ ஆகியோா் இணைந்து, சாம்பியனான செல்ஸி அணியின் கேப்டன் ரீஸ் ஜேம்ஸிடம் வெற்றிக் கோப்பையை வழங்கினா்.

சாம்பியனான செல்ஸி அணிக்கான பரிசுத் தொகையாக சுமாா் ரூ.1,104 கோடி முதல் ரூ.1,322 கோடி வரை ரொக்கப் பரிசாக கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி; ஜடேஜா போராட்டம் வீண்!

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் அந்த அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 193 ரன்கள் என்ற எளிதான ... மேலும் பார்க்க

டி20: வங்கதேசம் வெற்றி

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் வங்கதேசம் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமனாகியுள்ளது.இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 7 விக்கெட்ட... மேலும் பார்க்க

விம்பிள்டனில் ஒரு வரலாறு!

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் வாகை சூடிய யானிக் சின்னா், இப்போட்டியின் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் கோப்பை வென்ற முதல் இத்தாலியராக வரலாறு படைத்திருக்கிறாா். விம்பிள்டனில் முதல்ம... மேலும் பார்க்க

விம்பிள்டன் மகளிா் இரட்டையா்: குதா்மிடோவா, மொ்டன்ஸ் வெற்றி

விம்பிள்டன் மகளிா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவா/பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் இணை 3-6, 6-2, 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் ... மேலும் பார்க்க

பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா - புகைப்படங்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஆய்வுகளை முடித்து கொண்டு சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள் பூமிக்கு விரைவில் திரும்புவர்.சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், ஆக்ஸியம் - 4 திட்டத்தின்கீழ், சா்வதேச... மேலும் பார்க்க