செய்திகள் :

பேராசிரியர் மீது பாலியல் புகார்! நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பலி!

post image

ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.

ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் 20 வயது மாணவி, தீக்குளிக்க முயன்று, 90 சதவிகித தீக்காயங்களுடன் புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

கல்லூரி மாணவி ஏன் தீக்குளித்தார்? தீக்குளித்ததற்கான காரணம் என்ன? என்பதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில்,  தீக்காயப் பிரிவில் நிபுணர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மாணவி திங்கள்கிழமை இரவு பரிதாபமாக பலியாகினார். அவர் ஏன் தீக்குளித்தார் என்ற விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மாணவி தீக்குளித்தது ஏன்?

பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் பி.எட் 2- ஆம் ஆண்டு படித்துவந்த அந்த மாணவி, சனிக்கிழமை கல்லூரி முதல்வரின் அறைக்கு வெளியே தீக்குளித்தார்.

சுமார் 15 நாள்களுக்கு முன்னதாக பேராசிரியரும் கல்வித் துறைத் தலைவருமான(HOD) சமீர் குமார் சாஹு, மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மாணவி கல்லூரி முதல்வரிடம் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, மாணவியை தேர்வில் தோல்வியடைய வைத்துவிடுவேன் என்று அந்த பேராசிரியர் மிரட்டியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தீவிர உறுப்பினரான அந்த மாணவி, முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரிகளிடம் புகாரளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்து சாஹுவை பாதுகாத்ததாக, கல்லூரியின் முதல்வர் திலீப் கோஷை காவல் துறையினர் கைது செய்த நிலையில், மாணவி பலியானதும் சாஹுவையும் கைது செய்தனர்.

பலியான மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்ததோடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மாணவி தீக்குளித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள், ஆளும் பாஜக அரசைக் கண்டித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி பேராசிரியரே மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு, தீக்குளித்த சம்பவம் ஒடிசா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Odisha student dies after self-immolation over inaction after sexual harassment allegation

இதையும் படிக்க :கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!

மழைக்கால கூட்டத்தொடர்: குடியரசுத் துணைத் தலைவருடன் கார்கே ஆலோசனை!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.நா... மேலும் பார்க்க

அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார் ஆந்திர முதல்வர்!

ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தனது இரண்டு நாள் தில்லி பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல்வேறு மத்திய அமைச்சர்களைச் சந்திக்க உள்ளார்.இரண்டு நாள் பயணமாக தில்லி வந்துள்ளது... மேலும் பார்க்க

தில்லியில் நான்கு என்ஜின் அரசு முற்றிலும் தோல்வி: கேஜரிவால்

தில்லியில் நான்கு என்ஜின் அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் பாஜகவைத் தாக்கி பேசியுள்ளார். தலைநகரில் துவாரகா பகுதியில், தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்... மேலும் பார்க்க

ஏசி இயங்காததால் விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகள்! ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பரபரப்பு!

தில்லி - மும்பை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏசி இயங்காததால் ஆத்திரமடைந்த இரண்டு பயணிகள், விமானி அறைக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தில்லியில் இருந்து மும்பைக்கு ஸ்பைஸ்ஜெட்டின் எஸ்ஜி 9282 விமானம்... மேலும் பார்க்க

அமர்நாத்: 12 நாள்களில் 2.25 லட்சம் பேர் தரிசனம்!

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலை 12 நாள்களில் 2.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஜூலை 3-ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் காண்டர்பால் மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

தில்லியில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புது தில்லியில் செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி மற்றும் செயிண்ட் தாமஸ் பள்ளிக்கூடத்துக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. புது தில்லியின் துவாரகா பகுதியில், தில்லி பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க