ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு!
தில்லியில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
புது தில்லியில் செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி மற்றும் செயிண்ட் தாமஸ் பள்ளிக்கூடத்துக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
புது தில்லியின் துவாரகா பகுதியில், தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் செயிண்ட் ஸ்டீஃபென்ஸ் கல்லூரி மற்றும் செயிண்ட் தாமஸ் பள்ளிக்கூடத்துக்கு, இன்று (ஜூலை 15) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அம்மாநில காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அந்தக் கல்வி நிலையங்களில் இருந்த மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், தில்லி காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்புப் படையினர் ஆகியோர் அங்கு விரைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றது.
இந்தச் சோதனைகளில், தற்போது வரை சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தில்லியில் நேற்று (ஜூலை 14) இரண்டு சி.ஆர்.பி.எஃப். பள்ளிகள் உள்பட 3 பள்ளிக்கூடங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பினராயி விஜயன் பெயரில் மும்பை பங்குச்சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்!