அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ரஷியா பணியாது! டிரம்ப் விதித்த 50 நாள் கெடுவுக்கு எ...
காமராஜர் பிறந்த நாள் விழா: விருதுநகரில் மலர்தூவி மரியாதை செலுத்திய மாணவிகள், ஆட்சியர், அமைச்சர்கள்
காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் அவரது 123 -வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சிகாலத்தில் அனைவருக்கும் கல்வி, மதிய உணவு திட்டம், நீர் மேலாண்மை, தொழிற்சாலை வளர்ச்சி போன்றவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

மக்களிள் ஒருவராகவும், எளிமையான முதல்வராகவும் வாழ்ந்து மறைந்த காமராஜர் இன்றுவரை மறக்கமுடியாதவராக இருக்கிறார். பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளான ஜூலை 15-ம் நாளை 'கல்வி வளர்ச்சி' நாளாக 24.5.2006 அன்று அறிவித்து ஆணை வெளியிட்டனர். அது முதல் காமராசர் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விருதுநகரில் சுலோச்சன் தெருவில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வணிக பிரமுகர்கள், நகர் பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் விருதுநகர் மதுரை சாலையில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.